ரஜினிக்கு போட்டியாக தனுஷ் செய்திருக்கும் விஷயம்! இப்படி இறங்கிட்டாரே

Dhanush Rajinikanth
By Parthiban.A Apr 22, 2022 12:15 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினி மகளை திருமணம் செய்து 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நடிகர் தனுஷ் தற்போது விவாகரத்து பெற்று இருக்கிறார். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு என்ன காரணம் என தற்போது வரை அவர்கள் குடும்பத்தில் இருந்து யாருமே வெளிப்படையாக பேசவில்லை.

இது ஒரு புறம் இருக்க ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து அவர் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி சேர்வதாக அறிவிக்கப்பட்டது. பீஸ்ட் தோல்வி அடைந்ததால் ரஜினி படம் தற்போது டிராப் ஆகும் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் கடைசியில் படம் டிராப் ஆகவில்லை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ரஜினிக்கு போட்டியாக தனுஷ் ஒரு விஷயம் செய்து இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் தனுஷும் ஒரு படத்தில் நடிக்கிறாராம். அந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்டுகிறது. 

ரஜினிக்கு போட்டியாக தனுஷ் செய்திருக்கும் விஷயம்! இப்படி இறங்கிட்டாரே | After Rajinikanth 169 Nelson With Dhanush