தொடர் தோல்வியால் ராசியில்லா நடிகையாகிய கீர்த்தி? கடைசியில் இப்படி இறங்கிட்டாரே!!

Keerthy Suresh Indian Actress
By Edward Jun 27, 2022 06:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் மலையாள பெண்ணாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை அடுத்து ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர் தோல்வியால் ராசியில்லா நடிகையாகிய கீர்த்தி? கடைசியில் இப்படி இறங்கிட்டாரே!! | After Saani Kayitham Keerthy Suresh Flop Movies

தோல்வி படங்கள்

இடையில் சில தோல்வி படங்களை சந்தித்த கீர்த்தி மகாநதி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்டதோடு தேசிய விருது பெற்று புகழடைந்தார். பின் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தது. அவர் நடித்த கடந்த 5 படங்களுக்கும் மேல் தோல்வியை சந்தித்துள்ளது.

ராசியில்லா நடிகை என்ற பெயரையும் எடுத்த கீர்த்தி சாணி காயிதம் படம் ஆறுதல் அளித்தது, இதைதொடர்ந்து சுரேஷ், மகேஷ் பாபுவின் சர்கார் வாரிப்பாட்டா, குட்லக் சக்தி போன்ற படங்களும் தோல்வி அடைந்தது.

சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்து வரும் டோவினோ தாமஸ் நடிப்பில் வாஷி படத்திலும் வழக்கறிஞராக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அப்படமும் தோல்வியை சந்தித்துள்ளதாம்.

க்ளாமர் போட்டோஷூட்

இதனால் விரக்தியில் கையில் இருக்கும் மாமன்னன் படத்திலாவது தனக்கு கொடுத்த ரோலை சிறப்பாக செய்து முடிக்க முடிவெடுத்துள்ளார். மேலும் படவாய்ப்புக்காக போட்டோஷூட் பக்கமும் திரும்பி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.