தசரா நிகழ்ச்சியில் ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!! வீடியோ..
ரச்சிதா ராம்
கன்னட சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ரச்சிதா ராம், கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் அவரின் பிறந்தநாளன்று ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது ஒருசில ரசிகர்கள் அவரை கொஞ்சியபடி கன்னத்தை கிள்ளி பாசமழை பொழிந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், அக்டோபர் 19 ஆம் தேதி திங்களன்று இரவு தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி கர்நாடகாவின் துமகூரு நகரிலுள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரச்சிதா ராமும் கலந்து கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் சுபா கல்யாண், மாவட்டப் பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி அஷ்விஜா ஆகியோருடன் ரச்சிதா ராம் ரேம்ப் வாக் சென்றார்.
அத்துமீறிய நபர்
அப்போது பார்வையாளர்களில் ஒரு நபர் திடீரென மேடையில் ஏறி ரச்சிதா ராமின் தோளில் கையை போட்டு செல்ஃபி எடுத்தார். அதோடு இல்லாமல் ரச்சிதாவை தன் பக்கம் இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்டார். உடனே அங்கிருந்த காவல்துறையினர் அந்த நபரை உடனடியாக அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். ரச்சிதா ராமிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.