தமன்னாவின் முன்னாள் காதலரின் புதிய காதலி இந்த நடிகையா? வைரலாகும் வீடியோ

Tamannaah
By Kathick Jun 24, 2025 03:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் வர்மா மற்றும் முன்னணி நடிகையான தமன்னா இருவரும் காதலித்து வந்ததை நாம் அறிவோம்.

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், திருமணம் எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.

தமன்னாவின் முன்னாள் காதலரின் புதிய காதலி இந்த நடிகையா? வைரலாகும் வீடியோ | After Tamanna Is Vijay Varma Dating New Girlfriend

இவர்களுடைய காதல் முறிவுக்கு என்ன காரணம் என தெரியவில்லை. தமன்னா உடனான காதல் முறிவுக்கு பின் தனது புதிய காதலியை விஜய் வர்மா தேர்வு செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பிரபல ஹிந்தி நடிகை பாத்திமா சனா ஷேக்தான் நடிகர் விஜய் வர்மாவின் புதிய காதல் என்றும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் ஊடங்கங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

தமன்னாவின் முன்னாள் காதலரின் புதிய காதலி இந்த நடிகையா? வைரலாகும் வீடியோ | After Tamanna Is Vijay Varma Dating New Girlfriend

காஃபி ஷாப் இருந்து இருவரும் ஒன்றாக வெளியே வந்தபின், கட்டிப்பிடித்து வழியனுப்பி வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளிவந்த பின்தான் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..

பாத்திமா சனா ஷேக் இதற்குமுன் நடிகர் அமீர் கானின் தங்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் அமீர் கானை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.