உலகளவில் ரசிகர்கள்..தவெக தலைவர் விஜய்யை மீண்டும் கிண்டலடித்த சீமான்!! ப்ளூ சட்டை ட்ரோல்
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் சினிமாவைவிட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான முதல்படியை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார்.
இதற்கான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தது முதல் மாநாடு வரையிலான அவரது பேச்சும் செயலையும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்து பேசினார்.

தொடர் சீமான் விமர்சனம்
ஒருபடி மேல் கூமுட்டை என்ற வார்த்தையும் சீமான் பயன்படுத்தி இருந்தார். இதனையடுத்து நம்மை விமர்சிப்பவர்கள் யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் என்று விஜய் கூறியதாகவும் கூறப்பட்டது. அதை தொடர்ந்து சீமான் விமர்சனம் செய்து வந்தார். தற்போதும் சில கருத்துக்களால் விஜய்யை சீண்டியிருக்கிறார் விஜய்.

விஜய்க்கு உலகளவில் ரசிகர்கள் வைத்துள்ள விஜய், தன் கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்காதது ஏன்? என்றும் கேரளாவில் அதிக ரசிகரக்ள் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் அங்கு கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றும் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனை ப்ளூ சட்டை மாறன் ’கேரளா’ என்று கூறி சீமான் விஜய்யை விமர்சித்ததை பகிர்ந்துள்ளார்.
கேரளா.. pic.twitter.com/xz7HP6vH5W
— Blue Sattai Maran (@tamiltalkies) November 12, 2024
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        