தல அஜித்தின் படத்தில் சொட்டர் கதையை கேலி செய்த விஜய்யின் மாஸ்டர் ! காதல் கோட்டை இயக்குநர் பதிலடி

master valimai thalapathi65 Agathiyan
By Jon Mar 26, 2021 07:02 PM GMT
Report

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் கொரானா லாக்டவுனிற்கு பிறகு கடந்த பொங்கல் தினத்தன்று வெளியானது. வசூலிலும் படத்தின் விமர்சனமும் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர் படம். அப்படத்தில் விஜய் ஏன் குடிக்கிறீர்கள் என்று நடிகை மாளவிகா கேட்க, அதற்கு விஜய் நடிகர் கமலின் புன்னகை மன்னன் படத்தின் கதையை கூறுவார்.

மேலும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் கதையையும் சொல்லும் விஜய் தல அஜித்தின் காதல் கோட்டை படத்தையும் அதில் சொட்டர் எனக்கு வாங்கி கொடுத்தார் கலாய்த்துள்ளது பலரின் விமர்சனமாக இருந்தது. இதுபற்றி காதல் கோட்டை படத்தின் இயக்குநர் அகத்தியனிடம் பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அப்போது அகத்தியன், காதல் கோட்டை படத்தில் கதாநாயகி ராஜஸ்தானில் கொடுமையான குளிர் இருப்பது அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும்.

அங்கு படத்தின் லொகேஷனுக்காக சென்ற போது தான் எங்களுக்கு தெரிந்தது அவ்வளவு குளிர் என்று. காதல் கோட்டை படத்தில் வரும் கமலி ஊட்டியில் தான் இருப்பார். அதுவும் ஒரு குளிர் பகுதிதான். எனவே, ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு தான் இயல்பாக இருக்கும். அதனால் ராஜஸ்தானின் ஸ்வட்டர் என்பது பெரிய தப்பு என்பதில் லாஜிக் இல்லை.

அது தப்பு என்று அவர்கள் யோசித்தால் அது அவர்களுக்கு ஜாகரபி தெரியல்ன்னு அர்த்தம் என்று விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன்.