ஆணுடன் நெருக்கமான போட்டோ பார்த்து என் அம்மா கேட்ட கேள்வி!! க்ரித்தி ஷெட்டி வேதனை..
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை க்ரித்தி ஷெட்டி. தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் LIK என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது என்று இயக்குநர் விக்னேஷ் சிவன், அனிருத் கூறியிருந்தனர்.
இதனையடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் க்ரித்தி ஷெட்டி, பேட்டியொன்றில் ஏஐ பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், ஏஐ தொழில்நுட்பம் உண்மையிலேயே மிகப்பெரிய ஆபத்துதான்.
எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சமூக வலைத்தளங்களை ஏஐ தொழில்நுட்பம் ஆக்கிரமித்து இருக்கிறது. இது சினிமாவுக்கே பேராபத்து. சமீபத்தில் கூட நான் ஒரு ஆணின் மீது கைப்போட்டு நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதைப்பார்த்து அது யார்? என்று என் அம்மா கேட்டார்.
அப்போது தான் அவருக்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி விளக்கமளித்தேன். பிரபலங்களுக்கே இந்த கதி என்றால், சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள்? ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே குழப்பமாக இருக்கிறது என்று க்ரித்தி ஷெட்டி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.