இயக்குனரிடம் கெட்ட வார்த்தை பேசி வாய்ப்பு தேடிய ஐஸ்வர்யா? தனுஷ் இருந்தா இப்படித்தானே...

dhanush vetrimaran aishwaryarajesh vadachennai ganaa
By Edward Apr 03, 2022 08:35 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னணி நடிகை என்ற பெருமையை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கருப்பான தோற்றத்தில் இருப்பதால் பலர் ஐஸ்வர்யாவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் திணறவிட்டனர்.

அப்படி இருக்கும் போது தான் கிடைத்த வாய்ப்பு காக்கா முட்டை. இரு மகன்களுக்கு அம்மாவாக நடிக்க துவங்கி தேசிய விருதினையும் வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதையடுத்து நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வர சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார் அம்மணி.

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யாவின் கனா படம் சமீபத்தில் சீனாவில் 1000 தியேட்டர்களில் ஒளிப்பரப்பாகியது. இந்நிலையில் சமீபத்தில் வடசென்னை படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கூறியுள்ளார்.

வடசென்னை படத்திற்காக எனக்கு நடிக்க அழைப்பு கிடைத்தது. அதற்கான ஆடிஷனுக்கு சென்ற போது வெற்றிமாறன் திடீரென போன் எடுத்து கேமராவை ஆன் செய்தவர் உனக்கு தெரிந்த கெட்டவார்த்தைகளை பேசு என்று கூறினார்.

அப்படி அவர் கேட்டதும் ஷாக்கான பின் மீண்டும் என்னிடம் கெட்ட வார்த்தை பேசு என்று கூறினார். எனக்கு எந்த அளவிற்கு மோசமான வார்த்தைகள் தெரியுமா அதை வாய்க்கு வந்தபடி பேசி ஒப்பித்தேன். உடனே எப்போது ஷூட்டிங் வருவ நீ படத்தில் நடிக்குற என்று கூறினார் வெற்றிமாறன்.

அத்தனை நடிகைகள் வாய்ப்பிற்காக என்னென்னவோ பண்றாங்க நான் கெட்டவார்த்தை பேசி வாய்ப்பு பெற்றேன் என்று சுவாரசியமாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.