இப்படிப்பட்ட ஒருவருடன் தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.. திருமணம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி

Aishwarya Lekshmi
By Karthick Raja Jul 01, 2026 03:46 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர், ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, மாமன், தக் லைஃப் என தொடர்ந்து படங்கள் நடித்திருக்கிறார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளிவரவுள்ளது இந்த நிலையில், தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவருடன் தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.. திருமணம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி | Aishwarya Lekshmi Talk About Her Marriage

அதில் அவர், "திருமணம் என்னும் அமைப்பில் நுழைய எனக்கு பல சிக்கல்கள் உள்ளன. கட்டா குஸ்தி 2 படத்தில் ஒரு குழந்தையுடன் நெருக்கமாக இருந்த பொழுது என் தாய்மை உணர்வுகள் விழித்துக்கொண்டன.

எனக்காக வருபவர் நல்ல தந்தையாக இருப்பார் என்றும் என்னை விட்டு ஓடிப்போக மாட்டார் என்றும் குறைந்தபட்சம் என்னால் கணிக்கக்கூடிய ஒருவருடன் நான் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.