வேற எதையோ விக்கிறதுக்கு இட்லி கடை வைத்து பிழைச்சுப்பேன்!! நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் ஓபன்..

Aishwarya Bhaskaran Tamil Actress Actress Leader
By Edward Apr 09, 2026 03:15 PM GMT
Report

ஐஸ்வர்யா பாஸ்கரன்

தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். நடிகை லட்சுமியின் மகளாக குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்தார்.

வேற எதையோ விக்கிறதுக்கு இட்லி கடை வைத்து பிழைச்சுப்பேன்!! நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் ஓபன்.. | Aishwarya Bhaskaran Open About Movie Chance Adjust

தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ஐஸ்வர்யா, சமீபத்தில் வெளியான லீடர் படத்திலும் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடித்திருந்தார்.

இட்லி கடை வைத்து

ஐஸ்வர்யா அளித்த பேட்டியொன்றில், படவாய்ப்புகள் இல்லாத நேரத்தில் தேவைக்காக சோப்பு விற்றேன். வேற எதையாவது விற்பனை செய்வதற்கு பதிலாக சோப்பை விற்றதில் எந்த தவறும் இல்லை.

வேற எதையோ விக்கிறதுக்கு இட்லி கடை வைத்து பிழைச்சுப்பேன்!! நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் ஓபன்.. | Aishwarya Bhaskaran Open About Movie Chance Adjust

மரியாதையாக எந்த தொழில் செய்தாலும் மதிக்கப்பட வேண்டும், எனக்கு படவாய்ப்பில்லாமல் போனால் கூட நான் இட்லி கடை வைத்து பிழைத்துக்கொள்வேன் என்று கூறியிருக்கிறார். வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது குறித்து தான் ஐஸ்வர்யா இப்படி கூறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.