ஹாஸ்பிடலில் ஐஸ்வர்யா, ஆனால் தனுஷ் செய்த காரியத்தை பாருங்க
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்து ஆறேழு வாரங்கள் ஆகி விட்டது. அவர்களை சமரசம் செய்ய ரஜினி மற்றும் தனுஷ் குடும்பத்தினர் என பலர் முயற்சித்தும் பலன் இல்லை. அவர்கள் சட்டபூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றாலும் தனித்தனியாக தங்கள் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றனர்.
தனுஷ் வாத்தி என்ற தெலுங்கு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் முஸாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கி வந்தார்.
இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா திடீரென ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது. சமீபத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்ட அவருக்கு தற்போது மீண்டும் ஜுரம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் உடனே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் அவர்.
ஐஸ்வர்யா ஹாஸ்பிடலில் இருக்கும் நிலையில் தனுஷ் அவரது வீட்டில் தனது நான்கு நாய்கள் உடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.