மணிரத்னத்தால் செருப்பால் அடித்துக்கொள்ளும் நிலை! புலம்பித்தள்ளும் நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யா..

Aishwarya
By Edward Jun 03, 2022 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். 80களில் பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் இயக்குனரான மணிரத்னம், மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களால் மிகப்பெரியளவில் பேசப்பட்டார்.

அதன்பின் அவர் வாழ்க்கையையே மாற்றிப்படம் ரோஜா. இப்படத்தில் தான் மணிரத்னத்தால் அறிமுகமாகினார் ஏ ஆர் ரகுமான். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து ரகுமானை உச்சத்தை தொடவைத்தது. இதன்பின் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் மணிரத்னம்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை லட்சுமியின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா பேட்டி கொடுத்துள்ளார். அதில் தான் ரோஜா படத்தினை மிஸ் செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக ஐஸ்வர்யா தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸி நடிகையாக திகழ்ந்து வந்த சமயம் அது.

அப்போது மணிரத்னம் ரோஜா படத்தில் நடிக்க ஐஸ்வர்யாவிடம் கேட்டுள்ளார். ஆனால் தெலுங்கு படத்தின் கால்ஷீட் காரணமாக என்னால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அதன்பின் ரோஜா படத்தின் சூப்பர் ஹிட்டானதை அறிந்து என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்ளும் படியான மனநிலையில் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு காரணம் நான் கால்ஷீட்டால் புரக்கணிக்கப்பட்ட தெலுங்கு படம் டிராப் ஆனது தான். அப்படி அந்த படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தால் அவரின் திரைப்பயணம் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.