தனுஷ் -சிம்பு-லாம் இல்லை! சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பு..

simbu dhanush aishwarya rajinikanth ragavalawrence
By Jai Mar 14, 2022 05:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான் ஐஸ்வர்யா, செளந்தர்யாவின் திருமண வாழ்க்கை முதல் திருமணம் மனக்கசப்பை கொடுத்துள்ளது. செளந்தர்யா இரண்டாம் திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வருகிறார். அதுமுடிந்து சில வருடங்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷுடன் வாழ்ந்த 18 வருடத்தினை முடித்துள்ளார்.

இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்து வருகிறார்கள். ஐஸ்வர்யா சமீபத்தில் பயணி என்ற காதல் அல்பத்தினை எடுத்து வெளியிடவுள்ளார். இதைதொடர்ந்து நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தினை இயக்கவுள்ளார் என்று செய்திகள் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடன இயக்கம் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரண்ஸை ஐஸ்வர்யா சமீபத்தில் சந்தித்துள்ளார். ஐஸ்வர்யாவின் அடுத்த படத்தில் லாரன்ஸ் மாஸ்டரை நடிக்க வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் அவர்கள், என்னுடைய தலைவரின் மகள்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யா வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்து விட்டது. அதைபற்றி பேச எனக்கு உரிமையில்லை.

நடன இயக்குனராக இருக்கும் போதே அவர்களை பற்றி நன்றாக தெரியும் எப்பவும் அண்ணனாக என்னிடம் இரு தங்கையும் பாசமாக பேசுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.