ஐஸ்வர்யா - அபிஷேக் விவாகரத்து சர்ச்சை..டார்ச்சர் செய்த சல்மான்.. வைரலாகும் சஞ்சய் தத் எண்ட்ரி..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து ஒரு மகளுக்கு தாயானார் நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது மகள் வளர்ந்தப்பின் ஐஸ்வர்யா - அபிஷேக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விவாகரத்து
ஐஸ்வர்யா ராய் ஒரு மருத்துவரை காதலித்து வருவதாகவும் அவர்களின் நட்பு காதலாக மாறியதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் ஐஸ்வர்யாவின் நெருங்கிய வட்டாரங்கள் இது வெறும் வதந்தி என்றும் இருவரும் பழைய நண்பர்கள் என்றும் கூறினர். இதற்கிடையே அபிஷேக் பச்சன் நடித்து வரும் தஸ்வி படத்தின் நடிகை நிம்ரத் கவுருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் இதனால் ஐஸ்வர்யா - அபிஷேக்கிற்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இருவரும் வெளியிடாத நிலையில் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா, சல்மான்
தற்போது ஐஸ்வர்யா ராய் கடந்த காலத்தில் சல்மான் கானுடன் இருந்த உறவு குறித்து மீண்டும் இப்போது பேசப்பட்டு வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, சல்மான் கானுடன் இருந்த உறவு தன் வாழ்க்கையில் மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது. சல்மான் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறித்தியதாகவும் கூறியிருந்தார்.
சஞ்சய் தத்
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஐஸ்வர்யா ராய் குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். 1994ல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதும் ஐஸ்வர்யா ராய் முகம் இந்தியா முழுக்க பிரபலமானது. மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராயின் அழகில் பலர் மயங்கினர். அதில் சஞ்சய் தத்தும் ஒருவர். சமீபத்தில் ஒரு பேட்டியில், ஐஸ்வர்யா ராயை ஒரு விளம்பரத்தில் முதன்முறையாக பார்த்த சஞ்சய் தத், அவர் அழகில் மயங்கியிருகிறார்.
மேலும் ஐஸ்வர்யாவிடம் திரையுலகில் நுழைய வேண்டாம் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு காரணம் திரையுலகின் கடினமான போட்டிகள் அவரது அழகையும் மனதையும் பாதிக்கூடும், அந்த அழகு கெட்டுவிடக்கூடாது என்று என் மனதுதுடித்தது.
நீங்கள் இரண்டு படி மேலே ஏறிச் சென்றாலும், 500 பேர் உங்களை கீழே இழுப்பார்கள்" என்று ஐஸ்வர்யாவிடம் கூறியிருந்தாராம் சஞ்சய் தத். ஆனால், ஐஸ்வர்யா தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. வாழ்க்கை என்பது சவால்களை எதிர்கொள்ளும்போதுதான் வலுவடையும் என்று அவர் நம்பியதாக சஞ்சய் தத் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.