5 ஏக்கரில் பங்களா..500 ஏக்கர் தோப்பு!! ஜமீனாக இருந்து நடிகராக மாறிய காமெடியன்..
நடிகர் சத்யன்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பலர் இருந்தாலும் தன்னுடைய அப்பாவித்தனமான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் தான் நடிகர் சத்யன். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் சைலன்சர் என்ற ரோலில் நடித்து மிகச்சிறப்பாக நடித்து அனைவரது வரவேற்பை பெற்றார்.

தற்போது அவர் காமெடி நடிகராக இருக்கலாம், ஆனால் அவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். சூர்யாவின் காதலே நிம்மதி படத்தில் சிறிய ரோலில் நடித்து, 2000ல் இளையராஜ இசையில் வெளியான இளையவன் என்ற படத்தில் சத்யன் ஹீரோவாக நடித்திருப்பார்.
பின் கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். ஆனால் ஹீரோவாக நடித்து இரு படங்களும் வெற்றியை அவருக்கு தராததால் மீண்டும் குணச்சித்திர ரோல் பக்கம் திரும்பினார். தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் சத்யனுக்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது.

ஜமீந்தார் வீட்டு பிள்ளை
நடிகர் சத்யன் ஒரு ஜமீந்தார் வீட்டு பிள்ளையாம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபலமான ஊர் தான் மாதம்பட்டி. சமையலுக்கு பெயர் போன ஊராக இருக்கும் மாதம்பட்டியின் ஜமீன் தான் மாதம்பட்டி சிவக்குமார். பல கோடி சொத்துகளுக்கு அதிபதியான இவர், அக்காலத்தில் பரம்பரை குறிநில அரசர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. ரஜினியின் எஜமான் படம் இந்த குடும்பத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டது.

ஏக்கர் கணக்கில் சொத்து, கோவை திருப்பூர் பகுதிகளில் 10 பங்களாக்கள், சில பஸ்களும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். மாதம்பட்டி சிவக்குமாரின் ஒரே மகன் தான் சத்யன். இவர்களின் பங்களா மட்டுமே 5 ஏக்கரில் இருக்குமாம். இதனை தவிர பல நூறு ஏக்கர் கணக்கில் தோப்பு, சொத்துக்கள் இருக்கிறதாம். ஆனால் இப்போது இவர்களிடம் எந்த சொத்தும் இல்லையாம், அனைத்தும் விற்றுவிட்டார்களாம்.
மாதம்பட்டி சிவக்குமார் சினிமா மீது கொள்ள பிரியம் கொண்டவர். தமிழில் மிக முக்கிய நடிகர்களான மார்க்கண்டேயன் சிவகுமார், சத்யரா இருவரும் மாதம்பட்டி ஜமீனுக்கு உறவினர்களாம். அதிலும் மாதம்பட்டி சிவகுமாரின் அத்தை மகன் தான் நடிகர் சத்யராஜ்.

அதனால் வீட்டின் எதிர்ப்பை மீறி, சினிமாவில் நடிக்க வந்த சத்யராஜுக்கு மாதம் உதவித்தொகை அனுப்பி வைத்திருக்கிறார் மாதம்பட்டி சிவகுமார். அதன்பின் அவரே சினிமா படங்களை தயாரிக்கிறார். சில படங்கள் தோல்வியை தழுவியதால் சொத்துக்களை விற்க தொடங்கியிருக்கிறார். ஒருக்கட்டத்த்ல் தன்னுடைய ஒரே மகன் சத்யனையும் சினிமாவில் அறிமுகப்படுத்த நினைத்து, இளையவன் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படம் வெற்றியை பெறவில்லை. எதிர்பாராத தோல்விகளால் நஷ்டத்தை சந்தித்த மாதம்பட்டி குடும்பம், தங்கள் சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வந்தனர். மாதம்பட்டி சிவக்குமார் இறந்துவிட, கடைசியாக சில வருடங்கள் முன் மாதம்பட்டியில் இருந்த தங்களது பங்களாவையும் விற்று சென்னையில் குடியேறியிருக்கிறார் சத்யன். தற்போது சென்னையில் பெரம்பூர் பகுதியில் சொந்தமாக ஒரு பிளாட் விடிடில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.