கோர்ட், கேஸ்ன்னு அலையும் மகள் ஆராத்யா!! PS2-வை ஐஸ்வர்யா ராய் ஒதுக்க இது தான் காரணம்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகயாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்திருந்தார். முதல் பாகம் வெளியாகி பல கோடி வசூலை வசூலித்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மணிரத்னம் உள்ளிட்ட படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று வருகிறார்கள். ஆனால் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு மட்டும் வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை.
இதற்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகளான ஆராத்யா, உடல் நிலை சரியில்லை என்றும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யூடியூப் சேனல்களில் அவதூறு செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.
இதனை கண்ட ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன், தவறான உள்நோக்கத்துடன் என் மகள் பற்றி யூடியூப் சேனல்கள் வதந்திகளை பரப்பி வருவதாக சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவிட்டுள்ளனர். தன் தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார் ஆராத்யா.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில், குறித்த யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உண்மைக்கு மாறான வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்கவும் உத்திரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு காரணமாகத்தான் ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறாராம். விரைவில் படத்தின் முக்கிய பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.