பல வருடம் கழித்து அஜித்குமாரால் மகிழ்ச்சியான ஐஸ்வர்யா ராய்!! எல்லாமே கணவர் அபிஷேக் பச்சனால் தான்!!
ஐஸ்வர்யா ராய்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்று தமிழில் மணிரத்னம் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சினிமாவில் டாப் இடத்தினை பிடித்தார்.

பல மொழிகளில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து ஆராத்யா என்ற மகளை பெற்றெடுத்தார். சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்ட ஐஸ்வர்யா ராய் மகள் பெரியவளானது நடிப்பில் கவனம் செலுத்து வருகிறார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மிரளவைத்தார்.
ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்
இந்நிலையில், அபிஷேக் பச்சன் புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை வாங்கியுள்ளது. ஏற்கனவே இந்த அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்த ஆண்டும் இந்த அணி நேற்றைய இறுதி போட்டியில் புனேரி பல்டன்ஸை வீழ்த்தி கோப்பையை மறுபடியும் பிடித்தது.
இதனால் பெரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஐஸ்வர்யா ராய் சிறப்பாக விளையாடி தன்னுடைய அணியின் வீரர் அஜித்குமாரை பாராட்டி கையைப்பிடித்தபடி உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.