அஜித்தா வேண்டவே வேண்டாம் என கூறிய ஐஸ்வர்யா ராய்.. இயக்குனர் சங்கர் எடுத்த முடிவே இதுதான்..
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். 2. 0 படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் சரணின் 15 வது படத்தினை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 வையும் இயக்கி வருகிறார். ஒரே சமயத்தில் இரு பிரம்மாண்ட படங்களை இயக்கி பிஸியாக இருந்து வருகிறார்.

ஜீன்ஸ்
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதில் பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படம் ஜீன்ஸ். பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகியது.
இப்படத்தில் பிரசாந்திற்கு பதில் முதலில் அஜித் குமாரிடம் தான் கால்ஷீட் கேட்கப்பட்டது என்ற செய்தி வெளியானது. ஐஸ்வர்யா ராய் அஜித்துடன் ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறியதால் தான் பிரசாந்த் ஜோடியாக சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்ற தகவலும் அப்போதில் இருந்தே வதந்தியாக பரவியது.

ஐஸ்வர்யா ராய்
இதுகுறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அவர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஜீன்ஸ் படத்தில் இயக்குனர் சங்கர் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகன் கதாநாயகி என்று தேர்வு செய்து ஒப்பந்தமும் முடித்திருந்தார்.
அதில் எந்த மாற்றமும் இல்லை. ஐஸ்வர்யா ராய், அஜித் வேண்டாம் என்று கூறியது, அவருக்கு பதில் அப்பாஸ்-யிடம் கேட்டும் இருந்தது கூட உண்மையில்லை என்று கூறியிருக்கிறார். இது அப்படத்தில் சங்கருடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாதேஷ் இந்த விசயத்தினை கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார் சித்ரா லட்சுமணன்.