அந்த நடிகரா வேண்டவே வேண்டாம்ன்னு சொன்ன உலக அழகி!.. விஜய்யை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்!..
Vijay
Aishwarya Rai
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் 60 நாட்களில் நிறைவடையும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் நடிப்பில் 2002 -ம் ஆண்டு தமிழன் திரைப்படம் வெளியானது. இதில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடித்திருப்பார்.
இப்படத்தில் முதலில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் ஐஸ்வர்யா ராய், விஜய் பார்க்க சின்ன பையன் போன்று இருக்கிறார். இவருக்கு பதிலாக அஜித் போன்ற நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி தமிழன் பட வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியானது.