ஜாலி பண்றோம்.. அந்த இடத்துக்கு கூட்டிச்சென்று பாடாய் படுத்திய இயக்குனர்!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh
By Edward Apr 14, 2023 04:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைவாக இருக்கும் போது தமிழ் பேசும் நடிகைகள் நாங்களும் இருக்கிறோம் என்று சவாலுடன் நடிகையாக களமிரங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் சிறு ரோலில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்தின் மூலம் நடித்து தேசிய விருது நடிகையாக திகழ்ந்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

அடக்கவுடக்கமான குடும்ப குத்துவிளக்கு நடிகை என்று பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை நயன் தாரா உதறித்தள்ளும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் கூட நடித்து வருகிறார்.

ஜாலி பண்றோம்.. அந்த இடத்துக்கு கூட்டிச்சென்று பாடாய் படுத்திய இயக்குனர்!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. | Aishwarya Rajesh Complaint On Director Shooting

தற்போது அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் வெளியாகவுள்ள நிலையில் சொப்பன சுந்தரி படம் விரைவில் வெளியாகவுள்ளது. அப்படது பிரமோஷ்னுக்காக பேட்டிக்கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சொப்பன சிந்தரி படத்தி இயக்குனர் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.

ஒருநாள் ஷூட்டிற்காக இயக்குனர் எங்களிடம் இன்று சூப்பரான ஒரு இடத்திற்கு சென்று ஜாலி பண்றோம்-ன்னு கூறி கூட்டிச்சென்றார். அதை நம்பி எல்லோரும் சென்று பார்த்த போது தான் தெரிந்தது மிகக்கொடுமையான விசயம்.

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு இருக்கும் இடத்தில் ஷூட்டிங் வைத்து பாடாய் படுத்திவிட்டார். ஆனால் எனக்கு அது கஷ்டமாக தெரியவில்லை என்றும் ஏற்கனவே பல படங்களில் சுடுவெயிலில் காலில் செருப்பில்லாமல் கூட நடித்திருந்திருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

Gallery