தொடர்ந்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!! இத்தனை தோல்வி படங்களா..
தமிழ் சினிமாவில் சுறு பட்ஜெட் படங்களில் நடித்து தேசிய விருது நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வெளியானது. அப்படம் பெரியளவில் ஓடவில்லை. ஆனால் அப்படம் வெற்றியடைந்து விட்டது என்று கூறி சக்சஸ் பார்ட்டி வைத்து கேக்கும் வைத்தனர்.
அதனை தொடர்ந்து ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி என்று பல படங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படங்களும் சொல்லிக்கொள்ளும் படியாக ஓடவில்லை.
சமீபத்தில் ஃபர்ஹானா படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் காற்று வாங்கியிருக்கிறது ஃபர்ஹானா படத்தில் காட்சிகள். இதனால் உச்சக்கட்ட விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன செய்வது என்று முழுத்து வருகிறாராம்.
ஆனாலும் அவரை தேடி பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வரிசைக்கட்டி நின்று அடுத்தடுத்த படங்களை கமிட் செய்தும் வருகிறார்கள். தமிழ் பத்தாது என்று மலையாளம் பக்கமும் தற்போது சென்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.