ஆணவத்தில் கோடிக்கு ஆசைப்படும் பிரபல நடிகை! தெருக்கோடிக்கு வருவது நிச்சயம்..
நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதில் நடிகை நயன் தாராவிற்கு பிறகு சூட்டாகி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெண்களை தூக்கி நிறுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு பதில் இவர்தான் செட்டாகுவார் என்று முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் சிபாரிசு செய்யும் நடிகையாக மாறி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அப்படி அவர் நடித்த படங்கள் ஹிட் கொடுத்து வருவதால், சம்பளத்தினை லட்சத்தில் இருந்து கோடிக்கு மாற்றியுள்ளார். தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் இதைத்தான் முதலில் கூறி வருகிறாராம் ஐஸ்வர்யா.
அப்படி அவரை வைத்து இயக்கிய ஒரு இயக்குனர் கதை சொல்ல சென்றிருக்கிறார். அப்போது பலவிதமாக இயக்குனருக்கு கண்டீஷன் போட்டு இதை மாற்றுங்கள் அவரை போடுங்கள் என்று கூறியதோடு சம்பளத்தை கோடியில் கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம்.
மற்றதெல்லாம் ஓகே கூறிய இயக்குனர் சம்பளத்தை கேட்டு குழம்பி அந்த இடத்தைவிட்டு வெளியே சென்று வேறு நடிகையை புக் செய்ய சென்றுவிட்டாராம்.
இப்படி தலைக்கனத்தில் ஆடி பல படங்களை அம்மணி கோட்டைவிட்டுள்ளாராம். கோடிக்கு ஆசைப்பட்டு தெருக்கோடிக்கு செல்ல வேண்டாமே மேடம் என்று பலர் கூறிவிட்டு நடையை கட்டிவிடுகிறார்களாம்.