வெறிச்சோடிய தோல்வி படங்கள்... அந்த விஷயத்தில் மட்டும் குறியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ

Aishwarya Rajesh
By Edward Feb 20, 2023 03:33 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கி சட்டை படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தினை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான இரு படங்கள் படுதோல்வியை சந்தித்து முதலீடு செய்த படம் கூட வராமல் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது. படம் வெளியான முதல் நாளில் காலியாக இருந்ததால் படத்தையே தூக்கிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள்.

இரு படமும் சேர்த்து10 லட்சம் வரையில் மட்டும் தான் வசூளித்துள்ளதாம். அப்படி இருக்கையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அவரை தேடி வருகிறதாம். அந்தவகையில், தற்போது சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அப்படதிற்காக, ஐஸ்வர்யா ராஜேஷ் சுமார் 1.5 கோடி அளவில் சம்பளத்தை ஏற்றி இருக்கிறார். படமே ஓடாமல் போட்ட காசை கூட எடுக்க முடியாத படத்தில் நடித்து இப்படியா சம்பளத்தை ஏற்றுவது என்று தயாரிப்பாளர்கள் கோபத்தில் இருக்கிறார்கலாம்.