வாணி போஜனை போல் இந்த நடிகையையும் ஏமாற்றிய சியான் சிக்ரம்!! கோபத்தில் இயக்குனர் செய்த செயல்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து மிகப்பெரிய இடத்தினை பிடித்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். பொன்னியின் செல்வன் 2 படத்தினை அடுத்து தங்கலான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விக்ரம்.
சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தார். படம் பல காரணங்களால் வெளியாகுவதில் சிக்கல் வந்து கொண்டிருந்தது.
தற்போது ஒருவழியாக படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ரஜேஷ், ரித்து வர்மா, சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தில் நடிகை வாணி போஜனின் காட்சிகள் எப்படி நீக்கப்பட்டு அவருக்கு ஏமாற்றை கொடுத்ததோ, அதே போல் நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் காட்சிகளும் நிக்கப்பட்டுள்ளதாம்.
முக்கிய ரோலில் துருவ நட்சத்திர படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ரஜேஷ் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரமோஷன் தொடர்பாக ரூல்ஸ் அண்ட் கண்டீசன் போட்டதால் கடுப்பாகி இந்த முடிவை கெளதம் வாசுதேவ் மேனன் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.