நெருங்கி வந்து அந்த இடத்தில் கை வைத்தார்.. கசப்பான அனுபவம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ஃபர்ஹானா என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நான் கல்லூரி படிக்கும்போது என்னுடைய பிரண்ட்ஸ் வீட்டுக்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பினேன்.
ஆட்டோவில் ஒரு நபர் நெருங்கி வந்து என் மீது கைவைத்தார். . அப்போது ஆட்டோவை நிறுத்த சொல்லிட்டு, " என்ன அண்னா..? இப்படியான கஸ்டமர்களை ஆட்டோவில் ஏன் ஏற்றுகிறீர்கள்" என கேட்டேன்.
உடனே ஆட்டோ டிரைவர் அந்த நபரை திட்டிவிட்டு வண்டியில் இருந்து இறக்கி விட்டுவிட்டார் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.