பல வருடமாக வாய்ப்பு இல்லை!! விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முடிவு

Aishwarya Rajesh Tamil Actress Actress
By Edward Jul 13, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை, வடசென்னை, கனா உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

பல வருடமாக வாய்ப்பு இல்லை!! விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முடிவு | Aishwarya Rajesh Why Opted For Women Centric Movie

இப்படங்களுக்கு பின் சோலோ நடிகையாக பல படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார்.

தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மட்டுமே தனக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் மற்ற நடிகர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பல வருடமாக வாய்ப்பு இல்லை!! விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முடிவு | Aishwarya Rajesh Why Opted For Women Centric Movie

காக்கா முட்டை படம் வந்த போது பாராட்டினார்கள். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக நான் வாய்ப்பில்லாமல் இருந்தேன்.

அதனால் தான் விரக்தியில் இந்த முடிவை எடுத்தேன் என்று பகிர்ந்துள்ளார்.

அப்படி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த 15 படங்களில் நான் நடித்துவிட்டேன், எந்த நடிகரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை என்று தன் ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.