தனுஷை சீண்ட தான் இப்படி ஒரு காதலர் தின போட்டோ போட்டாரா ஐஸ்வர்யா?

Dhanush Divorce Valentines day Aishwarya Rajinikanth
By Parthiban.A Feb 15, 2022 01:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமணம் ஆகி 18 வருடங்கள் ஆன நிலையில் கடந்த மாதம் விவாகரத்தை அறிவித்து ஷாக் கொடுத்தனர். குழந்தைகளுக்காகவாவது அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரபலங்கள் பலரும் கூறினார்கள்.

இந்நிலையில் தற்போது காதலர் தினத்தன்று ஐஸ்வர்யா வெளியிட்ட கேக் போட்டோ தனுஷை சீண்டும் வகையில் இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

"A Promise made is A promise kept" என அந்த கேக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. "காப்பாற்றப்பட்ட சத்தியம் மட்டும் தான் சத்தியம்" என சொல்லப்பட்டு இருப்பதால், அது மறைமுகமாக தனுஷை தாக்கும் வகையில் தான் இருக்கிறது.