பிரிவுக்கு பின்னரும் தனுஷின் நினைவுகளை மறக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன விஷயம் தெரியுமா?

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Actors Latha Rajinikanth
By Dhiviyarajan Aug 02, 2024 10:19 AM GMT
Report

பிரபல நடிகர் தனுஷ், கடந்த 2006 -ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்ததை ரசிகர்களால் இன்னும் ஏற்க முடியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுத்த புகைப்படங்களை இன்னும் இன்ஸ்டாகிராமில் நீக்காமல் அப்படியே வைத்துள்ளார்.

பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்த கையோடு கணவன் அல்லது மனைவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிடுகிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் புகைப்படங்களை நீக்காமல் அப்படியே வைத்துள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாய் மாறியுள்ளது.  

பிரிவுக்கு பின்னரும் தனுஷின் நினைவுகளை மறக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன விஷயம் தெரியுமா? | Aishwarya Rajinikanth And Dhanush Personal Issue