நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இப்படி ஒரு ஆசையா.. என்ன கொடுமை இது!
சில்க் ஸ்மிதா
காந்த கண்ணழகி, திராவிட பேரழகி, கனவுக்கன்னி என பல பெயர்களை கொண்டு ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. வினு சக்கரவர்த்தியின் கண்ணில் பட சினிமாவில் மளமளவென படங்கள் பெற்று டாப் நாயகியாக வலம் வந்தார்.
ஒருகாலத்தில் இவரது கால்ஷீட் கிடைத்தால் போதும் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போது உள்ள தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக இருந்தது. சில்க் ஸ்மிதா தமிழை தாண்டி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆசையா?
இந்நிலையில், சில்க் ஸ்மிதா குறித்து நடிகையும் அவரது தோழியுமான அனுராதா பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சில்க் ஸ்மிதாவுக்கு பட்டுப்புடவை கட்டிகொள்ள வேண்டும் என்று பெரிய ஆசை. அவரிடம் ஒருமுறை நான், 'உங்களுக்கு புடவை பிடிக்குமா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'எனக்கு பட்டு புடவைதான் ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங் இல்லாதபோது காலையிலேயே பட்டு புடவையை கட்டிக்கொண்டு.
தலை நிறைய பூ வைத்துக்கொண்டு, நகைகளை போட்டுக்கொண்டு காலையிலிருந்து மாலைவரை அப்படியே அமர்ந்திருப்பேன்.
பிறகு இரவு அதை கழற்றிவைத்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்" என கூறியுள்ளார். இப்படி ஒரு ஆசை இருந்தும் அவரை அப்படி ரசித்து பார்க்க யாரும் இல்லையே என்பது பெரிய கொடுமை தான்.