நள்ளிரவில் கூட இதைதான் செய்றீங்களா? விவாகரத்துக்கு பின் இப்படி மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Jul 06, 2022 11:59 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக கடந்த 2004ல் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணத்திற்கு பிறகு இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கூறும் அளவிற்கு தனுஷ் விமர்சிக்கப்பட்டதை அப்படியே மாற்றியவர்களில் செல்வராகவனுக்கு அடுத்து அவரது மனைவி ஐஸ்வர்யா தான் காரணம்.

நள்ளிரவில் கூட இதைதான் செய்றீங்களா? விவாகரத்துக்கு பின் இப்படி மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | Aishwarya Rajinikanth Gym Work Out Post Midnight

மனைவியாக 18 வருடம்

அப்படி 3 படத்தில் கணவரை இயக்கி சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார் ஐஸ்வர்யா. இதனைதொடர்ந்து கணவர் தனுஷுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் கூட இருந்து பார்த்துக்கொண்ட ஐஸ்வர்யா 2 ஆண் மகன்களை பெற்று அவர்களுக்காகவே வாழ்ந்து வந்தார். இப்படி சென்ற 18 வருட திருமண வாழ்க்கையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரிந்து வாழ்வதாக கூறி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

நள்ளிரவில் கூட இதைதான் செய்றீங்களா? விவாகரத்துக்கு பின் இப்படி மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | Aishwarya Rajinikanth Gym Work Out Post Midnight

விவாகரத்துக்கு பின்

இந்த செய்தியால் மனமுடைந்து இருவரையும் சேர்த்து வைக்க போராடி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத தனுஷ் - ஐஸ்வர்யா தங்களின் படங்களிலும் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் தன் பெயரில் இருந்த ஐஸ்வர்யா தனுஷ் - என்பதில் தனுஷ் பெயரை எடுத்து அப்பா பெயரை மாற்றி விவாகரத்தினை உறுதி செய்தார்.

புகைப்பட அடிக்ட்டெட்

விவாகரத்தான சில வாரங்கள் ஐஸ்வர்யா ஜிம் ஒர்க்கவுட், சைக்கிளிங் என இறுக்கமான ஆடைகளில் இதுவரை வெளியிடாத புகைபடங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது காலையில் ஜிம் ஒர்க்கவுட் செய்த புகைப்படத்தை பதிவிடுவதை மறந்துவிட்டேன் என்று கூறி நள்ளிரவில் ஜிம் ஒர்க்கவுட்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பலர் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அடுத்த சமந்தாவா என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

Gallery