அவர் என்னில் ஒரு பகுதி, அவர் இல்லனு நம்ப முடியல..வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பதிவு
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
Soundarya Rajinikanth
By Dhiviyarajan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் ப்ரெண்ட்ஸ் என்ற ஆங்கில தொடரில் சாண்ட்லர் பிங்காக நடித்த மேத்யூ பெர்ரி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவரின் இறப்பை ரசிகர்களாலும், பிரபலங்களாலும் நம்ப முடியவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ப்ரெண்ட்ஸ் தொடர் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய ஒரு பகுதி அவர். உங்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் சாண்ட்லர் என பதிவிட்டு இருக்கிறார்.