தனுஷை போல் ஐஸ்வர்யாவும் இந்த விஷயத்தில் தோத்துட்டாரே! அவ்வளவு செலவு செஞ்சதும் வீணா போச்சே

anirudh dhanush rajinikanth maaran aishwaryarajinikanth payani
By Edward Mar 18, 2022 06:24 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கும் வேலையில் தனுஷுக்கு நல்ல ஆதரவாகவும் வெற்றி தோல்விக்கு துணை நின்று வந்தார் ஐஸ்வர்யா.

சில ஆண்டுகளாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜனவர் 17ல் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டதாக அறிவித்தனர். இதன்பின் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா, அனிரூத் குரலில் ‘பயணி’ என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இப்பாடல் கடந்த வாரமே வெளியாக திட்டமிடப்பட்டது.

ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்ததால் ஆல்பம் வெளியிடும் தேதி தள்ளிப்போனது. இதைதொடர்ந்து சரியாகி வந்த ஐஸ்வர்யா நேற்று அவரது அப்பா ரஜினிகாந்த்தை வைத்து பயணி ஆல்பத்தினை வெளியிட்டார்.

வெளியாகி நட்சத்திரங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரின் வாழ்த்துக்களுடன் வெளியானது. இப்பாடல் நன்றாக இருப்பதாக கூறியதுடன் ’வாழ்த்துக்கள் தோழி’ என்று ஐஸ்வர்யாவின் முன்னாள் கணவர் தனுஷ் டிவிட்டரில் தெரித்தார்.

இதிலிருந்து தங்களில் விவாகரத்து செய்தியை மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டனர். மிகப்பெரியளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான பயணி பாடல் இதுவரையில் 164K பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

அனைத்து மொழிகளிலும் சேர்த்து 2 லட்சம் பார்வையாளர்களை கூட தாண்டாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே தனுஷின் மாறன் படம் தோல்வியானதை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் ஆல்பமும் வரவேற்பு பெறாமல் போனதை ரசிகர்கள இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.