2-ஆம் திருமணம் செய்ய உள்ளாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நபர்..
கடந்த 2004ல் திருமணமாகி கணவர் தனுஷுக்கு உறுதுணையாக இருந்த ஐஸ்வர்யா 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக அறிவித்தார். இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்த விசயம் மிகப்பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இருவரும் இன்றுவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய அனுகவில்லை என்றும் கூறப்பட்டது. தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா, தன் அப்பா ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இளம் நடிகர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது. ஆனால் இது உண்மையா அல்லது பொய்யா என்று இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நெருக்கமான ஒருவரும் ஆங்கில டிஜிட்டல் ஊடகத்திற்கு அளித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது ஐஸ்வர்யா 2 ஆம் கல்யாணம் செய்யப்போகும் தகவல் பொய். அவற்றில் எதிலும் உண்மையில்லை என்றும் 2 ஆம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளாராம்.