வெறித்தனமான ஜிம் ஒர்க்கவுட்! விவாகரத்துக்கு பின் புலம்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் 2004 ஆம் ஆண்டு தன் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷுக்கு காதல் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா 3 படத்தினை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
அப்போது தனுஷுக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் இடையில் நெருக்கம் இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவியது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனுஷுடன் 18 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.
மகன்கள் இருவர் இருக்கும் நிலையில் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜனவரி 17 ஆம் தேதி பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர். ரஜினி உள்ளிட்ட அவரது குடும்பம் திரையுலகினர் அனைவரும் இதனால் ஷாக்காகினர்.
சமரசம் செய்தும் இருவரும் ஒரு வழிக்கு வரவில்லை. தற்போது தனுஷ் படங்களிலும் ஐஸ்வர்யா இயக்கத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் விவாகரத்துக்கு பின் முற்றிலுமாக மாறி ஐஸர்யா உடற்பயிற்சி, யோகா, க்ளாமர் புகைப்படங்கள் என வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தார்.
தற்போது, எல்லா வாரமும் ஒரே மாதிரி இருக்காது. அப்படி இருந்தாலும் வாழ்க்கையில் பல சவால்கள் விளையாட்டாகவும் இருக்காது. நான் ஜிம் ஒர்க்கவுட்டில் சந்திக்கும் எல்லாமே, ஏன், எப்படி, எப்போது, என்ன என்ற கேள்விகள் எங்கிருந்தாலும் எதுவாக இருந்தாலும் எனக்கு தெரியவரும்.
அதற்காக நான் எல்லா வழிகளிலும் சிறந்து விளங்க மட்டுமே பாடுபடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் தனுஷ் பிரிந்ததை நினைத்தா இப்படி பதிவிடுகிறீர்களா என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள். ஒருசில அவருக்கு ஆறுதலாக நீங்கள் வலிமையானவர் என்றும் கூறி வருகிறார்கள்.
Not every week is the same..if it were to be then life wouldn’t be such a challenging game
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) July 12, 2022
My workout time is when I contemplate
All the Why’s?When’s?How’s?n
What’s?
All I know is that whatever wherever whenever
In every possible way I will strive only to get better! ?? pic.twitter.com/zn3reXjTcK