இதுதான் அந்த சீக்ரெட்! விவாகரத்துக்கு பின் ஓப்பனாக உண்மையை கூறிய ரஜினி மகள் ஐஸ்வர்யா

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Jul 02, 2022 12:20 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணத்திற்கு பிறகு 3 படத்தினை கணவரை வைத்து இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதன்பின் வை ராஜா வை படத்தையும் இயக்கியிருந்தார்.

விவாகரத்து

18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்று வளர்த்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா திடீரென விவாகரத்து செய்து பிரியவுள்ளதாக தகவல்களை பகிர்ந்தனர். ஜனவரி 17 ஆம் தேதி வெளியிட்ட இந்த செய்தி ரஜினிகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பெரியளவில் பாதித்தது. விவாகரத்துக்கு பின் தனுஷ் தன் படங்களில் கவனம் செலுத்தியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்களை இயக்க ஆர்வம் காட்டி வந்தார். கிடைக்கும் நேரத்தில் தன் மகன்களுடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்.

படங்களில் கவனம்

தனுஷை பிரிந்த பின் சுதந்திர பறவைப்போல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பிட்னஸ் புகைப்படங்கள், சைக்கிளிங், ஜிம் ஒர்க்கவுட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது, யார் ஒருவர் 108 சூரிய நமஸ்காரங்களை செய்கிறார்களோ அவர்களது உடலில் மேற்பகுதி வலுப்பெறும் என்று கூறியதோடு,

ஸ்குவாட் பயிற்சிகள் செய்தால் உடலின் கீழ் பகுதி வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார். யோகாவோ? ஜிம்ம? நமக்கு எது செட்டாகும் என்று நமது உடலே கூறும். யாருக்கும் நாம் எதையும் நிரூபிக்க வேண்டாம் என்ற கருத்தினையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.