தனுஷுக்கு போட்டியா செய்றீங்களா ஐஸ்வர்யா? அப்படி என்னதான் படமா இருக்கும்?

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Jun 16, 2022 06:50 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. கணவரை வைத்து 3 என்ற படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார் ஐஸ்வர்யா. இதன்பின் இரு குழந்தைகளை பெற்று கணவருக்கு சப்போர்ட்டாக இருந்து வந்தார்.

விவாகரத்து முடிவு:-

இருவருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரியவுள்ளதாக அறிக்கை மூலம் இருவரும் தெரிவித்தனர். இரு மகன்கள் வரும் நேரத்தில் இப்படி பிள்ளைகளை பற்றி யோசிக்காமல் பிரிந்தது பலரை அதிர்ச்சியாக்கியது. தற்போது தனுஷ் விவாகரத்தால் பல படங்களில் நடித்து சினிமாவில் கவனம் செலுத்தியும் வருகிறார்.

சினிமாவில் கவனம்:-

அதேபோல் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பின் இதுவரை இல்லாத அளவிற்கு சைக்கிளிங், உடற்பயிற்சி, ஷூட்டிங் என்று செய்யும் அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பயணி என்ற பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். பெரியளவில் அந்த பாடல் வீடியோ வரவேற்பு பெறவில்லை.

இதைதொடர்ந்து ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தினை இயக்கவுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது தமிழ் டப்பிங் செய்யும் புகைப்படம் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழை மனப்பாடம் செய்வதை பலர் கிண்டலடித்தும் அப்படி எந்த படத்துக்கு டப்பிங் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.