பர்ஸ்ட் சிம்பு.. அடுத்தது தான் தனுஷ்.. விவாகரத்திற்குப் பிறகு வெளிவரும் ஐஸ்வர்யாவின் உண்மை முகம்
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவரும் சினிமாவில் இயக்குனராக வலம் வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் சிரிப்பு தோற்றத்தில் ரஜினிகாந்தும் நடிக்க உள்ளாராம்.
2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "3" படத்தின் மூலம் ஐஸ்வர்யா இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் கவுதம் கார்த்திக் நடிப்பில் "வை ராஜா வை" படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் தான் கொடுத்தனர்.
ஐஸ்வர்யாவை நமக்கு இயக்குனராக தான் தெரியும் ஆனால் இவர் படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார். இவர் முதலில் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து "நட்பே நட்பே" என்ற பாடல் பாடியுள்ளார். இப்பாடல் 2003 ம் வெளியானது.
இதன் பின்னர் தான் தனுஷ் உடன் சேர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "உன் மேல ஆசை தான்" என்ற பாடலை பாடியிருப்பார்.