திருட்டுக்கு காரணமே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த காரியம் தான்!! ஆப்பு வைத்த வேலைக்காரப்பெண்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்து தனியாக இருந்து படங்களை இயக்க ஆரம்பித்திருக்கிறார். கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நாட்களை செலவிட்டும் வருகிறார். சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் லாக்கரில், 30 கிராம் வைரமும், 100 பவுன் நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் காணாமல் போனது.

போலிஸில் ஐஸ்வர்யா புகாரளித்ததில் பெயரில் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் தான் திருடியதாக கண்டிபிடித்துள்ளனர். போலிசார் கைது செய்து விசாரித்து வந்ததில், திருடிய நகைகளை விற்பனை செய்து சோழிங்கநல்லூரில் 1 கோடி மதிப்பில் வீட்டினையும் வாங்கியிருக்கிறார்.
விசாரணையில் பெணிப்பெண் வாக்குமூலமாக பல விசயங்களை கூறியிருக்கிறார். அதில் ஐஸ்வர்யா தான் திருடுவதற்கான அம்பாக இருந்துள்ளார் என்று கூறியிருக்கிறார் அந்த பெண்.

அதாவது, ஐஸ்வர்யா தனக்கு 30 ஆயிரம் சம்பளமாக தந்ததாகவும் மாடு மாதிரி உழைச்சதால் இதை வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும் என்று நினைத்து சின்ன சின்ன திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதனை அவர்கள் கவனிக்காததால் பெரிய திருட்டை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த திருடப்பட்ட நகைகல் தவிர்த்து மேலும் 43 சவரம் நகைகள் போலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.
திருடப்பட்டதாக கூறி ஐஸ்வர்யா கூறப்பட்டதைவிட அதிகளவில் நகைகளை மீட்டதில் போலிசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் விசாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.