18 வருஷ காதலுக்கு எண்ட் கார்டு கொடுக்க இந்த பிளானா? ஐஸ்வர்யா - சிம்பு கூட்டணியாமே!!

simbu divorce dhanush rajinikanth aiswarya
By Edward Mar 10, 2022 10:42 AM GMT
Report

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பல செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் முக்கியமானதாக இருப்பது நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்தி தான். பிரிவை அறிவித்த இருவருக்கும் பல முறையில் ரஜினி உட்பட பலர் அறிவுரைகளை கூறி வந்தனர்.

ஆனால் ஐஸ்வர்யா மனம் இறங்கியதாகவும் தனுஷ் அதற்கு உடன்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இது ஒருபுறம் இருக்க தனுஷ் அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு வேலையில் இருந்து வருகிறார்.

அதேபோல் ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் வேலைகளில் இருந்து தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனுஷ் சேரவில்லை என்ற நோக்கமோ தெரியவில்லை சிம்புவை வைத்து ஒரு படத்தினை இயக்கவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தனுஷை திருமணம் செய்வதற்கு முன் சிம்புவும் ஐஸ்வர்யாவும் காதலித்தது இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், சிம்புவுடன் இணையவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறுவதில் தான் இருக்கிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்கை செளந்தர்யா ரஜினிகாந்த் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியதற்கு வாழ்த்து கூறியிருந்தார். இதை வைத்து ரசிகர்கள் கதை அப்படி போகுதா என்று கேலி செய்து வருகிறார்கள்.