விவாகரத்தான விரக்தி! ரஜினி மகள் ஆச்சே இப்படிதான் பார்ஸ்ட்டா இருப்பாங்க..

dhanush rajinikanth Aishwaryaa Rajinikanth raghavalawrance
By Edward Mar 21, 2022 06:48 AM GMT
Report
450 Shares

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து 2004ஆம் ஆண்டு இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து நடந்தது. திருமணத்திற்கு பிறகு தனுஷ் மிகப்பெரிய உச்சத்திற்கு வந்தார்.

ஐஸ்வர்யாவும் தனது கணவரை வைட்து 3 என்ற படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். இதையடுத்து 2 பிள்ளைகளை பெற்ற ஐஸ்வர்யாவும் தனுஷும் 18 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.

இச்செய்தி மிகபெரியளவில் பேசப்பட்ட நிலையில் இருவரும் யார் பேச்சையும் கேட்காமல் தங்கள் வேலைகளை செய்து வந்தனர். ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பின் பயணி என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கியிருந்தார்.

அப்பாடல் சமீபத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இப்பாடலை தொடர்ந்து ஐஸ்வர்யா அடுத்த வாரமே சிம்பு மற்றும் ராகவா லாரன்ஸை வைத்து படம் ஒன்றினை இயக்கவுள்ளதாக அறிவித்தார்.

ஆனால் அதில் ராகவா மட்டுமே நடிக்கவுள்ளதாகவும் சில புகைப்படத்தை வெளியிட்டார் ஐஸ்வர்யா. தற்போது அப்படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வேகம் ஆகாதம்மா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.