அஜித் மேனேஜர் டூ விக்ரம் வரை.. இயக்குநர் அஜய் ஞானமுத்து - ஷிமோனா திருமண புகைப்படங்கள்..
தமிழில் 2015ல் வெளியான டிமான்டி காலனி படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அறிமுகப்படமே மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றப்பின், இமைக்கா நொடிகள், விக்ரமின் கோப்ரா, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட படங்களை இயக்கினார் அஜய் ஞானமுத்து.
அஜய் ஞானமுத்து - ஷிமோனா
தற்போது டிமான் டி காலனி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 3வது பாகத்தினை இயக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையி தன்னுடைய நீண்டநாள் காதலியான ஷிமோனா என்பவரை திருமணம் செய்து கரம் பிடித்திருக்கிறார் அஜய் ஞானமுத்து.
திரைப்பிரபலங்களான, விக்ரம், ஹிப்ஹாப் ஆதி, கேஎஸ் ரவிக்குமார், ஆதிக் ரவிச்சந்திரன், அதர்வா, ஆனந்தராஜ், அருள்நிதி, அஸ்வின் குமார், நடிகை மிருணாள், அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, விஷால் உள்ளிட்ட பலர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.