பிரான்ஸ் ரோட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்ஸ்... வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை அஜித் குமார் தற்போது துணிவு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் வாரிசு படத்துடன் ஜனவரி 12ல் மோதவுள்ளது.
இதற்காக பல வேலைகளை இரு படங்களின் படக்குழுவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் அஜித் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களையும் எடுத்து வைரலாக்கியும் வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அவரின் 42வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அஜித் மனைவியின் பிறந்தநாளை தன் குடும்பத்துடன் ஸ்டார் ஓட்டலில் கொண்டாடினார்.
அதன் புகைப்படங்களும் வைரலானதை தொடர்ந்து தற்போது பிரான்ஸில் மனைவி ஷாலினியை இறுக்க அணைத்தபடி எடுத்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் இப்படியொரு போஸ் கொடுத்துள்ளாரே என்று கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.