ஏகே 62- அப்டேல்லாம் இப்ப கிடையாது!! பைக்-ஐ எடுத்து நடையை கட்டிய அஜித் குமார்

Ajith Kumar Lyca
By Edward Mar 06, 2023 11:16 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து மிகப்பெரிய வசூலை பெற்றார். அப்படத்தினை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகினார்.

ஆனால் விக்னேஷ் சிவன் கதையில் சொதப்பியதால் அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் ஏகே 62ல் இருந்து தூக்கிவிட்டனர். அவருக்கு பதில் மகிழ்த்திருமேனியை இயக்க கமிட் செய்தனர்.

ajith bike ride

இந்நிலையில் படத்தின் பூஜை போடப்பட்டு அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு பதிவினை போட்டு ஷாக் கொடுத்துள்ளார். எப்போது அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு உலக சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துவிடுவார்.

அதுவும் எங்கு சென்றாலும் போஸ் மேல் போஸ் கொடுத்து புகைப்படத்தையும் டிரெண்ட் செய்துவிடுவார்.

அந்தவகையில் தன்னுடைய 2வது ’பரஸ்பர மரியாதை பயணம்’ உலக சுற்றுலா ரைட்-ஐ லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு பிறகு ஆரம்பிக்கவுள்ளார் என்ற பதிவினை போட்டுள்ளார்.

கூடிய விரையில் ஏகே62 படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் இந்த ரைட்-ஐ ஆரம்பிக்கவுள்ளதை கேட்ட நெட்டிசன்கள் பலர் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.