அஜித்தின் Ak61-ல் கூறியதெல்லாம் புருடா தானாமே? இதுதான் உண்மையான கதை..

Ajith Kumar Rakul Preet Singh Manju Warrier
By Edward May 07, 2022 08:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். அவர் நடிப்பில் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் ஏகே 61 படத்தினை ஆரம்பித்துவிட்டார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பும் காஸ்டிங் லிஸ்ட்டும் இணையத்தில் வெளியாகிக்கொண்டு வருகிறது. அஜித் இப்படத்தில் இரட்டை ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் அப்பா, மகன் கதாபாத்திரமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளர் என்ற செய்தியும் உறுதியானது. மேலும் ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவலாம். படத்தில் ஒரே அஜித் தான், ஹீரோயின் மஞ்சு வாரியர் மட்டும் தான் என்று கூறப்படுகிறது. ரகுல் பிரீத் சிங், இளமை தோற்றமுள்ள அஜித் எல்லாம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வெள்ளை தாடியை வைத்து எச் வினோத் எப்படி கதையை எடுப்பார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வருகிறார்களாம். இதனை வலை பேச்சு விமர்சகர் பிஸ்மி சமீபத்தில் கூறியுள்ளார்.