ஆடு தானாக வந்து மாட்டிக்கிச்சே! அஜித்தின் ஏகே62 சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியானது வலிமை படம். போனிகபூர், ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில் பிப்ரவரி 24 ஆம்தேதி வெளியாகி தற்போது வரையில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இப்படத்தினை அடுத்து இதே கூட்டணியில் அஜித்தின் 61 வது படம் கூடிய சீக்கிரமே ஆரம்பமாகவுள்ளது. அதற்காக அஜித் வெள்ளை தாடியுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இரட்டை ரோலில் நடிக்கவுள்ள அஜித் மங்காத்தா படத்தை போல நெகடிவ் ரோலிலும் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்தனர். அதாவது ஏகே62 படத்தினை இயக்குனார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது.
தற்போது இப்படத்திற்காக அஜித் சம்பளம் எவ்வளவு என்ற செய்தி வெளியாகியுள்ளது. வலிமை படத்திற்காக அஜித் 55 கோடிக்கும் மேல் சம்பளமாக பெற்றுள்ளார்.
தற்போது படம் நல்ல வசூலை பெற்றதால் அஜித் ஏகே 62-காக சுமார் 100 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். இதற்கு ஒரு படி மேல் ஏறிய தயாரிப்பு நிறுவனம் லைக்கா 105 கோடி சம்பளம் கொடுக்க தானே முன்வந்து கூறியுள்ளதாம்.