அஜித்திடம் பணம் புடுங்க தான் இந்த வேலையா...எல்லாமே ட்ராமாங்க

ajith
By Tony Oct 06, 2021 07:15 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் புதிய புகைப்படங்கள் இன்று வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது.

தற்போது அதை விட செம்ம சூடான செய்தி என்னவென்றால், அஜித் தான் என் சாவுக்கு காரணம் என்று ஒரு பெண் தீக்குளிக்க முயன்றது தான்.

ஆம், சில மாதங்களுக்கு முன்பு அஜித் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை புகைப்படம் எடுத்ததால் ஒரு பெண் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து ஷாலினி கூறியதால் அவரை வேலையில் சேர்த்தனர், பின் என்ன ஆனது என்று தெரியவில்லை, அவர் மீண்டும் வேலையிலிருந்து வெளியேறினார்.

இதன் பின் அஜித் தான் எனக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று போலிஸில் எல்லாம் புகார் கொடுத்து வந்தார்.

சமீபத்தில் இவர் தீக்குளிக்க சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அஜித் இவரின் குழந்தைகளின் கல்விக்கு செக் கொடுத்தாலும் வாங்குவது இல்லையாம்.

மொத்த பணமாக கையில் கொடுங்கள் என்று கூற, இங்கு தான் அஜித் தரப்பு அப்செட் ஆகியுள்ளது.

மேலும், இவர் தீக்குளிக்க வந்த போது சுற்றி போலிஸார்கள், முன்னணி செய்தி சேனல்களே அங்கு இருக்க, ஒருவேளை எல்லாமே ட்ராமாவா, பேசி வைத்துக்கொண்டு இங்கு ட்ராமா செய்கிறாரா என்று கூட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.