ஹோட்டல் ரூமில் நடிகர் அஜித் செய்த விஷயம்.. பெரும் சர்ச்சை
அஜித் பற்றி வெளிவந்த சர்ச்சைக்குரிய தகவல்களில் ஒன்று பாலாவுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் தான். நான் கடவுள் படத்திற்காக முதன் முதலில் அஜித்தை தான் ஹீரோவாக கமிட் செய்துள்ளார் பாலா.
அதற்காக நடிகர் அஜித்திற்கு ரூ. 1 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சொன்ன நேரத்தில் படப்பிடிப்பு துவங்காமல் தள்ளிப்போய் கொண்டே இருந்துள்ளது. இதனால் கொடுத்த அட்வான்ஸ் பணத்துடன் வட்டியையும் சேர்த்து ரூ. 3 கோடியாக திருப்பி தரவேண்டும் என பிரபல பைனான்ஷியர் அஜித்திடம் கூறியுள்ளார்.
இதுதான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருந்துள்ளது. இதற்கு அஜித், பட தாமதமானதற்கு நான் காரணம் இல்லை இயக்குனர் பாலா தான் என கூறியுள்ளார். இதற்கான பஞ்சாயத்து பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது.
அப்போது அஜித்தை சுற்றி இயக்குனர் பாலா, பைனான்ஷியர் அன்பு மற்றும் சில ஆட்கள் இருந்துள்ளார். அஜித்துக்கு சில நெருக்கடிகளை கொடுத்துள்ளனர். அப்போது அஜித் யாரும் எதிர்பார்க்காத ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார். பில்லா படத்தில் வருவது போல் தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த ஆட்களை ஒரு விஷயம் செய்தார்.
அதன்பின் அனைவரும் அப்படியே பின்வாங்கிவிட்டார்களாம். இதன்பின் பணத்தை செட்டில்மென்ட் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டாராம் அஜித். இதுதான் அந்த ஹோட்டலில் நடந்தது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.