பல வருடங்களுக்கு பின் விளம்பரத்தில் நடித்து நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் தற்போது சினிமாவை தாண்டி கார் ரேஸில் முழுமையாக ஆர்வம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்கின்றனர்.
அஜித்தின் கார் ரேஸிங் அணிக்கு பிரபல கூல்டிரிங்க்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இணைத்திருப்பதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில், தற்போது அந்த அந்த கூல்டிரிங்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் அஜித் நடித்து இருக்கிறார்.

கார் ரேஸில் விபத்தில் அஜித் சிக்கிவிடுவது போலவும், அந்த கூல்ட்ரிங்க்ஸ் குடித்ததும் அவர் மாஸாக ரேஸில் ஜெயித்து கப் வாங்குவது போலவும் இந்த விளம்பரத்தில் காட்டப்பட்டு இருக்கிறது.
மேலும், 'துணிஞ்சவங்களுக்கு தடைகளே கிடையாது', 'லட்சியங்களை நோக்கி முன்னேறு' என அஜித் வசனங்களும் மாஸாக பேசியுள்ளார். இதோ அந்த விளம்பர வீடியோ:
#Ajithkumar's Campa Advertisement video !!pic.twitter.com/zcIPOfqESm
— AmuthaBharathi (@CinemaWithAB) March 25, 2026