கேரியரை பார்த்து பயப்படும் அஜித்குமார்.. ஈகோவை கீழே இறக்கி பெரிய ராஜந்திரம் போடும் நிலை..

Ajith Kumar Gossip Today
By Edward Sep 02, 2022 10:52 AM GMT
Report

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் தன்னுடைய 61 வது படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்து வருகிறார். அஜித் பெரும்பாலும் சமுகவலைத்தளங்களிலும் பொது இடங்களையும் தவிர்த்து வருகிறார்.

ஏதாவது முக்கிய அறிவிப்பு என்றால் அவரது மேனேஜர் தான் வெளியிட்டு வருவார். ஆனால் தற்போது அஜித், தன்னுடைய மார்க்கெட் சமீபகாலமாக இறங்கிவிட்டதால் பொது இடங்களில் தலைக்காட்ட துவங்கியுள்ளார்.

சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸில் எப்படி கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினாரோ அதேபோல் சமீபத்தில் திருச்சி எங்கும் பட்டையை கிளப்பி இருந்தார். அஜித்தை சினிமாவை சார்ந்த சிலரின் விமர்சனத்தால் பயந்து போய் இப்படியான கீழே இறங்கி இருக்கிறார் அஜித் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

பான் இந்திய படங்களின் வருகையால் அனைவரது கவனத்தையும் ஈர்க்க தெலுங்கு, கன்னட நடிகர்கள் கூட பிரமோஷனுக்காக நாடு நாடாக சென்று வருகிறார். இதனால் தான் அஜித் ரசிகர்களை தேடிச்சென்றே புகைப்படங்களை எடுத்து கொள்கிறார் என்றும் கூறியுள்ளார்.