துணிவு விநியோகஸ்தரால் உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்

Ajith Kumar Thunivu
By Tony Feb 17, 2026 04:30 AM GMT
Report

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் எல்லாம் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா ரீரிலிஸ் ஆகி செம ஓட்டம் ஓடியது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த வாரம் எந்த புதுபடமும் வராததால் விஜய்யின் கில்லியை மீண்டும் ரீரிலிஸ் செய்கின்றனர்.

துணிவு விநியோகஸ்தரால் உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள் | Ajith Fans Angry On Thunivu Re Release

ஆனால், அதே நேரத்தில் துணிவை விநியோகஸ்தர்கள் ரீரிலிஸ் செய்ய, இந்த படம் தற்போது தேவையா என அஜித் ரசிகர்களே மிக கடுமையாக திட்டி வருகின்றனர்.

ஏனெனில் தற்போது மங்காத்தா வெளிவர, உடனே ஏன் இதை ரிலிஸ் செய்ய வேண்டும், அதுவும் வந்த 3 வருடம் ஆகிய படத்தை என கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.